திருமதி ஜீவமலர் பெலிஜியா ஜேசுதாசன் – துயர் செய்தி

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழியை வதிவிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவமலர் பெலிஜியா ஜேசுதாசன் அவர்கள் 16-11-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் தட்சணாமூர்த்தி கிளாறிஸ் பீரிஸ் தம்பதிகளின் பாசமிகு மகளும்,ஜேசுதாசன் அன்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,பிறாங்ளின், டயான், யூட் ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஜோர்ச், லாரன்ஸ், லில்லி, டென்சில் மற்றும் காலஞ்சென்ற சாந்தி, வேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நிசா(றோமா), சுமித்ரா, றோசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,நற்ராலி, விரான்டன், இவாங்கா, ஜேடன், றியானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.