உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
காருக்குள் சிக்கி உயிரிழந்த நான்கு சிறுவர்கள்; துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள துவாரபூடி கிராமத்தில் நான்கு சிறுவர்கள் காருக்குள் சிக்குண்டு மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் வங்காள விரிகுடா மண்டலத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
6 முதல் 8 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள், கடந்த வாரம் வீட்டைவிட்டு வெளியே விளையாடச் சென்றனர். நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் பரபரப்புடன் தேடத் தொடங்கினர்.
தேடுதலில் ஈடுபட்ட உறவினர்கள், வீட்டிற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் சிறுவர்கள் நால்வரும் மயங்கி கிடப்பதை கண்டனர். உடனே கார் கண்ணாடி உடைக்கப்பட்டு குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
துரிதமாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். காருக்குள் ஆக்சிஜன் இல்லாத சூழ்நிலையில் மூச்சுத் திணறலால் அவர்கள் உயிரிழந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த கார் எவருடையது? ஏன் திறந்த நிலையில் இருந்தது? ஏதேனும் தவறான காரணமா? என பல கோணங்களில் விசாரணை நடத்தப்படுகிறது.