ஐ.சி.சி T20;மீண்டும் முதலிடத்தில் வனிந்து
ஐ.சி.சி T20 பந்துவீச்சு தரவரிசையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
முன்னதாக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் முதலிடத்தை குறுகிய காலத்திற்கு தக்கவைத்திருந்தார்.
ரி20 உலகக் கிண்ண போட்டி
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ரி20 உலகக் கிண்ண போட்டியில் தனது துல்லியமான பந்துவீச்சில் அவுஸ்ரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட்டை பின்தள்ளி ரஷித் கான் முதலிடத்திற்கு முன்னேறினார்.
அதேவேளை உலகக் கிண்ண போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3/13 என்றும் இங்கிலாந்துக்கு எதிராக 2/23 என திறமையை வெளிப்படுத்திய ஹசரங்க முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.