புலமை பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனின் சாதனை
புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 25 ஆம் திகதி வெளியானது.
வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் 198 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்த மாணவன் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பன்னிப்பிட்டி கிறிஸ்துராஜா வித்தியாலய மாணவன் செனித நெட்டினு பெரேரா என்ற மாணவன் 198 புள்ளிகனை பெற்று இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் தீராத நோய்களுக்கு புதிய மருந்துகளை கண்டுபிடித்து ஆதரவற்ற நோயாளிகளை குணப்படுத்தும் மருத்துவராக வருவதே எதிர்காலம் தொடர்பில் தனது ஒரே நம்பிக்கை என தெரிவித்துள்ளார்.
நான் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றினாலும் இலங்கையில் முதலாவதாக வருவேன் என்று நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.