போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கைக்கு அமெரிக்க தூதுவர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு!
அனைத்து கடன் வழங்குநர்களும் நியாயமானதும் சமமானதுமான நடவடிக்கைக்கு இணங்கும் போது, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்காக, இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்க தயார் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டம் குறித்த இந்தியாவின் உறுதிப்பாட்டை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெரிஸ் கிளப்புடன் இணைந்து நிதியுதவி அல்லது கடன் நிவாரணத்தை வழங்க உறுதி பூண்டுள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.