போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கையில் 2000 ரூபாவை எட்டும் தோடம் பழத்தின் விலை!
இறக்குமதி செய்யப்பட்ட தோடம் பழத்தின் விலை ரூ.1990 ஆக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இறக்குமதி செலவு மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக இதன் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக பழ இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட மூன்று தோடம்பழங்கள் 100 முதல் 200 ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தோடம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் இறக்குமதி செய்யப்படும் தோடம்பழங்களே இலங்கை சந்தையில் அதிகம் விற்பனையாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.