போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
குறைந்த விலையில் முட்டைகளைக் கொள்வனவு செய்த அமைச்சர்!
55 ரூபாவுக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வேலைத்திட்டம் கொழும்பு மற்றும் கம்பஹாவில் இன்று (28) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பத்தரமுல்லையில் விலை குறைந்த முட்டைப் பொதி ஒன்றை கொள்வனவு செய்தார்.
இந்நிலையில் சந்தையில் முட்டையின் விலை 65-70 ரூபாவாக அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு, நுகர்வோருக்கு 55 ரூபா விலையில் முட்டைகளை விற்பனை செய்யும் பணியை இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.
oo
இதன்படி, கொழும்பு மற்றும் கம்பஹாவின் பல பிரதேசங்களில் முட்டை விற்பனை செய்யும் முதுற்கட்ட பணி இன்று விவசாய அமைச்சில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
10 கனரக வாகனங்களில் 10 இடங்களில் 4 இலட்சம் முட்டைகள் விற்பனை செய்ய எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், இம்மாதம் 30ஆம் திகதி காலி மற்றும் கண்டி நகரப் பகுதிகளில் முட்டை விற்பனை செய்யப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.