போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திரு சின்னையா சண்முகரெத்தினம் (செய்யமணி) – துயர செய்தி
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா இறம்பைக்குளத்தை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சண்முகரெத்தினம் அவர்கள் 08-11-2022 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னையா, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், வடிவாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சாந்தநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,சுமங்கலை(கொழும்பு). நிஷாந்தன்(லண்டன்), பூங்குழலி(சாந்தநாயகி நாட்டிய கோயில், கனடா), சாயிபிரசாந்த்(Naga Heating and Cooling கனடா) ஆகியேரின் அன்புத் தந்தையும்,ஞானச்சந்திரன்(Engineer SLT Colombo), தமரா(Nurse London), இளங்குமரன்(AATEK Heating and Cooling Canada), நிவேதா(Data Filing Canada) ஆகியேரின் அன்பு மாமனாரும்,சாருகேசி, ராகவர்ஷி, ஷாரிகன், ஷான்ந்ரிகன், ஆதிர்ஷன், இமாலயா, ஆலயன், சயானா, சாயிஷா ஆகியேரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, பூபதி, சற்குணம் மற்றும் இராசநாயகம்(முன்னாள் பிரதம லிகிதர் கச்சேரி வவுனியா), காலஞ்சென்ற கனகசபை, கமலாதேவி, விமலாதேவி மற்றும் குலசிங்கம் ஆகியேரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற தியாகராசா(முன்னாள் உதவி அரசாங்க அதிபர் வேலணை, முன்னாள் தலைவரும் ஆலய பரம்பரை உரித்தினரும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம்), நடராசா(வர்த்தகர் நானாட்டான்), பூம்பாவை மற்றும் உமாதேவி, நவரட்ணராசா(செயலாளர் கோவில் குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலயம், தலைவர் அருளகம் சிவன் முதியேர் இல்லம் வவுனியா), காலஞ்சென்ற வாகீஸ்வரன்(BABA Video கனடா), உமாதேவன்(தலைவர் கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலயம் வவுனியா), அஸ்தநாயகி, சுவாதிநாயகி(ஆசிரியை வவுனியா மகாவித்தியாலயம்) ஆகியேரின் அன்பு மைத்துனரும் ஆவார்.