போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
வடக்கின் 5 மாவட்டங்களுக்கு இணைத் தலைவராக சார்ள்ஸ் நியமனம்!
வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வடக்கின் 5 மாவட்டங்களினதும் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் ஜனாதிபதியின் செயலாளரால் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநராகக் கடந்த மாதம் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மீண்டும் நியமிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைமைப் பதவி வழங்கப்படவில்லை.
இதனால் வடக்கின் 5 மாவட்டங்களிலும் அண்மையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை.
இதன்போது வடக்கின் 5 மாவட்டங்களினதும் ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக அவரை ஜனாதிபதியின் செயலாளர் நியமித்து மாவட்ட செயலகங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.