போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
நள்ளிரவு திரையரங்குகளுக்கு முன் குவிந்த ரசிகர்கள்!
போனி கபூர் தயாரிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் முன்னணி நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று (புதன்கிழமை) நள்ளிரவு 1 மணிக்கு வெளியாகிறது.
இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் முதல் காட்சியை பார்வையிட பல்வேறு திரையரங்குகளிலும் ஏராளமான அஜித் ரசிகர்கள் கூடிவருகின்றார்கள்.
இவ்வாறான நிலையில் சென்னையில் உள்ள திரையரங்கின் முன்பு திரண்ட ஏராளமான ரசிகர்கள் திரையரங்கம் முன்பாக பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை ரசிகர்களின் கொண்டாட்டங்களால் குறித்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் இன்று அதிகாலை 1மணிக்கு முதலாவது காட்சி காண்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.