அதிஷ்டத்தால் பிரகாசிக்க போகும் 3 ராசிக்காரர்கள்

கிரகங்கள் ஒவ்வொன்றும் ராசியை மாற்றும் போது அதன் நிலைகளால் சில சமயங்களில் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும்.
அப்படி உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் கன்னி ராசியில் பயணித்து வருகிறார்.
இதனால் சத்ருஹந்த யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகமானது மங்களகரமான யோகங்களுள் ஒன்றாகும். சத்ருஹந்த என்பதற்கு எதிரிகளை அழிப்பவர் என்று பொருள்.
ஒரு ஜாதகத்தில் 6 ஆவது வீடு எதிரியின் வீடாகும். இந்த 6 ஆவது வீட்டில் செவ்வாய் அல்லது சனி இருந்தால் அல்லது அதன் பார்வை விழுந்தால் இந்த யோகம் உருவாகும்.
இந்த மங்களகரமான யோகத்தால் கடன் தொல்லை மற்றும் சட்ட சிக்கல்கள் நீங்கும். அதோடு அனைத்து காரியங்களிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
மேஷம்
கன்னி ராசிக்கு சென்ற செவ்வாய், மேஷ ராசியின் 6 ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளார். இதனால் சத்ருஹந்த யோகம் உருவாகியுள்ளது.
இந்த யோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் இதுவரை சந்தித்து வந்த சட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடுவர்.
தொழில் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும்.
கடின உழைப்பின் முழு பலனையும் பெறக்கூடும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசியின் 3 ஆவது வீட்டில் செவ்வாய் இருந்தாலும், 6 ஆவது வீட்டில் செவ்வாயின் பார்வை விழுகிறது.
இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் தங்களின் எதிரிகளை வீழ்த்துவார்கள். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் மிகுந்த தைரியத்துடன் இருப்பார்கள்.
அனைத்து துறைகளிலும் வெற்றி காண்பார்கள். தன்னம்பிக்கையால் எப்பேற்பட்ட பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவார்கள்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு திடீர் பணவரவு கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 12 ஆவது வீட்டில் செவ்வாய் இருந்தாலும், அதன் பார்வை 6 ஆவது வீட்டில் விழுகிறது.
இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் எப்பேற்பட்ட சவால்களையும் சமாளிக்கும் தைரியத்தைப் பெற்றிருப்பார்கள்.
பணிபுரிபவர்கள் கடின உழைப்பால் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். முக்கியமாக இக்காலத்தில் எதிரிகளை வெற்றி காண்பீர்கள்.