கடும் காலநிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்

நாட்டில் தற்பொழுது நிலவும் கடுமையான சூரிய ஒளி காரணமாக சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான சூரிய ஒளி காரணமாக சருமம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் நயனி மதரசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்த நாட்களில் பின்பற்ற வேண்டும் என நிபுணர் வைத்தியர் நயனி மதரசிங்க தெரிவித்துள்ளார்.